13 March 2024

தட்பவேட்ப நிலை மாற்றம் மற்றும் மாசுபாடுகள்

By Deeran

தட்பவேட்ப நிலை மாற்றம் என்றால் நம் பூமி வெப்பமயமாதல் அதற்க்கு காரணம் மனிதர்கள் தான். ஆம் மனிதர்களால் வெளியேற்றப்படும் கரியமில வாயுவு (carbon dioxide) காரணமாக பூமி வெப்பமயமாகிறது மேலும் காடுகளை அழிப்பதாலும், சுற்றுசூழலை மாசுபடுத்துவதாலும் பூமி வெப்பமயமாகிறது. நிலக்கரி போன்ற புதைபடிவ புதைபடிவ எரிபொருள்களை பயன்படுத்துவதன் மூலம் கரியமில வாய்வு வெளியேற்றப்படுகிறது. நீர் நிலை மாசுபாட்டாலும் பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது.

மனிதர்கள் இரவில் அதிக ஒளி பயன்படுத்துவதால் இரவில் மட்டுமே இயங்கும் சில உயிரினங்களின் உடலில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமே ஆனது அல்ல, இது மற்ற உயிரினங்களுக்கும், வருங்கால சந்ததியினருக்கும் உரியது ஆகும் என்று அக்கிரமியவாக்கி என்ற சுற்றுசூழல் ஆய்வாளர் மற்றும் இயற்கை ஆர்வலர் கூறுகிறார்.

நம் நாட்டு மரங்களை (native trees ) நம் வீட்டில் அல்லது தேவை இல்லாத இடத்தில் நட்டு இரண்டு (அ) மூன்று வருடங்களில் காடுகளை உருவாக்கலாம் என்கிறார்.இம்முறையில் இவர் தன் தாய் நாடான ஜப்பானில் காடுகளை உருவாக்கி இருக்கிறார். இம்முறை மூலம் நாம் நம் பூர்விகமான மரங்களை பாதுகாக்கலாம். இதன் மூலம் பூமி வெப்பமயக்கிறதை தடுக்கலாம், மேலும் இதன் மூலம் பூர்விகமான பறவைகள், விலங்குகளை பாதுகாக்கலாம். புதுவை உள்ள சரவணன் என்பவர் 100 ஏக்கர் வறண்ட தரிசு நிலத்தை வெப்ப மண்டல இலையுதிர் காடாக மாற்றி உள்ளார். இவர் இதை ஆரோவில் என்ற தொண்டு நிறுவன உதவியுடன் செய்து உள்ளார். இவர் இதற்கான மரங்களை மேற்கு தொடர்ச்சி மலையிலும், தமிழகத்திலும் உள்ள காடுகளிலும் இருந்து கொண்டு வந்து உள்ளார்.

ஒரு ஆராய்ச்சி செய்தியின் படி அண்டார்டிக்காவில் உள்ள பென்குயின்களின் கழிவில் நூண்ணிய நெகிழிக்களின் துகள்களின் பங்கு இருப்பது தெரியவருகிறது. சூரிய தகடுகள் (solar panel), நெகிழிகள், மின்கல அடுக்கு(Battery), மின்னணுவியல் (Electronics) பொருட்கள் சீக்கிரமாக மடக்காது, மேலும் இது போன்ற பொருட்களால் சுறுசுழல் பாதிப்பு அடைகிறது. சூரிய தகடுகள் படிம ஏறிபொருட்களை விட சிறந்தது மற்றும் பாதுக்காப்பானது. இது போன்ற பொருட்களை மறுசுழற்சிக்கு பயன்படுத்துவதன் மூலம் மாசுப்பட்டை கட்டுப்படுத்தலாம்.

கங்கை நதி இந்தியாவின் உயிர் நதி ஆகும், இதில் கொட்ட படும் சாம்பல், குப்பைகளாலும் இந்நதி மிகவும் மாசுபடுகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது ஓங்கில்கள்(Dolphin) ஆகும்.

காலநிலை மாற்றத்தினால் கடல், நீர், காற்று மாசுபடுகிறது, இதனால் மனிதர்கள் மட்டும் இன்றி பிற உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. பூமிவெப்ப நிலை மாற்றத்தால் வளர்ச்சி அடைந்த நாடுகளை விட சிறிய நாடுகளே அதிகம் பாதிக்க படுகின்றன.

மரம் செடிகளை போன்று மிதவை வாழி (plankton) ஆக்ஸிஜன்னை வெளியிடும். இது சூரிய ஒளி மூலம் ஒளிசேர்க்கை செய்து இதன் மூலம் ஆக்ஸிஜன்னை வெளியிடும். இது பல திமிங்கிலங்களுக்கு உணவாக உள்ளது. இது கடல் வாழ் உயிரினங்களின் உணவு சங்கிலியில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. நெகிழிகளை கடல்கலில்கொட்டுவதன் மூலம் சூரிய ஒளி தடுக்கப்பட்டு, மிதவை வாழி(plankton)ளில் ஒளிசேர்க்கை தடுக்க படுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்களின் உணவு சங்கிலி பாதிப்பு அடைகிறது.

அதிக வெப்பத்தால் அண்டரிட்டிக்க மற்றும் அர்டிக்காவில்பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயரும், இதனால் சென்னை போன்ற கடற்கரை நகரங்கள் மூழ்கும் வாய்ப்பு உள்ளது.

இயற்கையைப் பாதுகாத்து பராமரிப்பது நம் கடமையாகும், இது ஒவ் ஒரு மனிதனின் தனிப்பட்ட கடமையாகும்.

இயற்கையைப் பாதுகாப்போம். நன்றி