யானை
யானை மிக பெரிய விலங்கு ஆகும். இவை ஆசிய மற்றும்ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள காடுகள் மற்றும் புல்வெளிகளில் வாழ்கின்றன. இவை மிக பலம் வாய்ந்த, மிக புத்திசாலியான விலங்கு ஆகும். ஒரு யானையால் 30க்கு மேற்பட்ட யானைகளை நியாபகம் வைத்துக்கொள்ள முடியுமாம். யானைகளில் மூன்று வகை உள்ளன. அவை ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் யானைகளுக்கு தந்தம் இருக்கும் ஆனால் ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தம் இருக்கும். தமிழர்கள் யானைகளை பண்டைய காலத்தில் கயம், வேழம், களிறு, பிளிறு, களபம், மாதங்கம், வாரணம், அஞ்சனாவாதி, அத்தி, அத்தினி, அரசுவா, […]