10 September 2023

யானை

By Deeran

யானை மிக பெரிய விலங்கு ஆகும். இவை ஆசிய மற்றும்ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள காடுகள் மற்றும் புல்வெளிகளில் வாழ்கின்றன. இவை மிக பலம் வாய்ந்த, மிக புத்திசாலியான விலங்கு ஆகும். ஒரு யானையால் 30க்கு மேற்பட்ட யானைகளை நியாபகம் வைத்துக்கொள்ள முடியுமாம்.

யானைகளில் மூன்று வகை உள்ளன. அவை

  • ஆப்பிரிக்க காட்டு யானைகள்
  • ஆப்பிரிக்க புல்வெளி அல்லது புதர் யானைகள்
  • ஆசிய யானைகள் (இரண்டு வகை படும்)
    • போர்னியோ யானைகள்
    • ஸ்ரீலங்கன் யானைகள்

ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் யானைகளுக்கு தந்தம் இருக்கும் ஆனால் ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தம் இருக்கும். தமிழர்கள் யானைகளை பண்டைய காலத்தில் கயம், வேழம், களிறு, பிளிறு, களபம், மாதங்கம், வாரணம், அஞ்சனாவாதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அனுபமை, ஆனை, இபம், இரதி, குஞ்சரம், கரி என்னும் பல பெயர்களால் அழைத்தனர். தமிழர்கள் யானையினை பெரும் பரிசாக கொடுத்தனர். யானை போர்களில் பயன்படுத்த பட்டன. தமிழ் இலக்கியங்களில் யானை பற்றி குறிப்புகள் உள்ளன